சினிமா
ஏ.ஆர்.ரகுமான்

சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்

Published On 2020-11-30 06:57 GMT   |   Update On 2020-11-30 14:30 GMT
பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் (பாப்டா) என்ற அமைப்பு இந்தியாவில் திரைப்படம், தொலைக்காட்சி துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் தனித்துவமான அமைப்பாகும். சினிமா துறையில் திறமையானவர்கள் 5 பேரை கண்டறிந்து விருதுகளையும் வழங்கி வருகிறது.

இந்த அமைப்பின் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சினிமா, டி.வி துறையில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களது திறமைகளை வெளியில் கொண்டு சென்று பிரபலப்படுத்தும் வகையில் ஏ.ஆர்.ரகுமானின் பங்களிப்பு இதில் இருக்கும்.



இந்த அமைப்புக்கு ‘நெட்பிளிக்ஸ்’ ஆதரவு அளித்துள்ளது. சினிமா துறையில் திறமைசாலிகளை கண்டறிவதற்காக பாப்டா அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News