முன்னணி நடிகர்களான காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில் பிரபல நடிகரும் அங்கு செல்ல இருக்கிறார்.
காஜல், சமந்தாவை தொடர்ந்து மாலத்தீவு செல்லும் பிரபல நடிகர்
பதிவு: நவம்பர் 27, 2020 20:31
சமந்தா - காஜல் அகர்வால்
முன்னணி நடிகையான காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தேனிலவை கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார்கள். அதுபோல் முன்னணி நடிகையான சமந்தாவும் தனது கணவர் நாக சைதன்யாவுடன் விடுமுறையைக் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார்.
அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகரான சிலம்பரசன் மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்த சிலம்பரசன், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கைவிடப்பட்டதாக கூறப்பட்ட மஃப்டி படத்தின் ரீமேக்கில் சிலம்பரசன் நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு மாலத்தீவில் நடக்க இருப்பதாகவும் இதில் சிலம்பரசன் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :