இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை நயன்தாராவுக்கு, அவரது காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பிறந்தநாள் பரிசு
பதிவு: நவம்பர் 18, 2020 12:25
நயன்தாரா, விக்னேஷ் சிவன்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் படம் ‘நெற்றிக்கண்’. அவரின் காதலியான நயன்தாரா தான் இப்படத்தின் ஹீரோயின். ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார்.
இன்று நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ‘நெற்றிக்கண்’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். கண் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, ஒரு குட்டிக் கதை சொல்வது போல் அமைந்துள்ள இந்த டீசர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
திரில்லர் படமான இதில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை அடுத்தாண்டு வெளியிட உள்ளனர்.
Related Tags :