சினிமா
சமீரா ரெட்டி

மீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்கும் சமீரா ரெட்டி?

Published On 2020-10-28 14:14 IST   |   Update On 2020-10-28 14:14:00 IST
நடிகை சமீரா ரெட்டி மீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஷால், ஆர்யா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். சில வருட இடைவெளிக்குப்பின் இரண்டு பேரும் ஒரு புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இவர் ‘அரிமா நம்பி,’ ‘இருமுகன்,’ ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கியவர். எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். 



இதில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள். விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்க இருக்கிறார். அதேபோல் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சமீரா ரெட்டி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ஆர்யாவுடன் வேட்டை படத்தில் இணைந்து நடித்திருந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. முக்கிய காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட உள்ளன.

Similar News