சினிமா
வனிதா, பீட்டர் பால்

பீட்டர் பாலின் மனைவி போலீசில் பரபரப்பு புகார்.... சர்ச்சைக்குள்ளாகும் வனிதாவின் திருமணம்

Published On 2020-06-28 13:07 IST   |   Update On 2020-06-28 13:11:00 IST
நடிகை வனிதாவை, பீட்டர் பால் நேற்று திருமணம் செய்துகொண்ட நிலையில், அவரின் முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், பீட்டர் பால் என்பவரை நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் பீட்டர் பால் மீது வடபழனி காவல் நிலையத்தில், அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார். பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து அளிக்காமல், அவர் வனிதாவை திருமணம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். 



கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளதாகவும், முறையாக விவாகரத்து அளித்த பின்னரே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Similar News