சினிமா
ஜெயச்சந்திரன்

சினிமா படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் மரணம்

Published On 2020-06-26 09:33 GMT   |   Update On 2020-06-26 09:33 GMT
ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன் உள்பட 150 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஜெயச்சந்திரன் மாரடைப்பால் மரணமடைந்தார்.
சினிமா படத்தொகுப்பாளர் ஜி.ஜெயச்சந்திரன் மாரடைப்பால் நேற்றுமரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. விஜயகாந்த் நடித்து, திரைப்பட கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய 'ஊமை விழிகள்' படத்தில், படத்தொகுப்பாளராக ஜெயச்சந்திரனை, தயாரிப்பாளர் ஆபாவாணன் அறிமுகம் செய்தார். 

அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து 'உழவன் மகன்', 'பூந்தோட்ட காவல்காரன்', 'உரிமை கீதம்', 'புதுப்பாடகன்', 'புலன் விசாரணை', "கேப்டன் பிரபாகரன்' உள்பட 150 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக ஜெயச்சந்திரன் பணியாற்றினார்.

அவர் சென்னை மேடவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு தேவி என்ற மனைவியும், அருள்முருகன், பாலமுருகன் என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள். அவருடைய உடல் தகனம் மடிப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது.
Tags:    

Similar News