சினிமா
விஜய் - அஜித்

விஜய் பிறந்தநாளில் டிரெண்டான அஜித்

Published On 2020-06-22 12:05 GMT   |   Update On 2020-06-22 12:05 GMT
நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடிய வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் அஜித் டிரெண்டாக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு  திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 நேற்று இரவு முதலே #HappyBirthdayThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் அதிகம் பேரால் ட்வீட் செய்யப்பட்டு ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருந்தது.



 இதைப்பார்த்த அஜித் ரசிகர்களும் களத்தில் இறங்கினர். #NonpareilThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய அவர்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட் செய்து முதலிடத்துக்கு கொண்டு வந்திருக்கின்றனர். 
Tags:    

Similar News