சினிமா
மாஸ்டர் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

கொளுத்துங்கடா.... விஜய் பிறந்தநாளுக்கு மாஸ்டர் படக்குழு வெளியிட்ட மாஸான போஸ்டர்

Published On 2020-06-22 11:37 IST   |   Update On 2020-06-22 11:37:00 IST
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மாஸ்டர் படக்குழு மாஸான போஸ்டரை வெளியிட்டு உள்ளது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு, ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். டுவிட்டரிலும் #HappyBirthdayThalapathyVijay என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி உள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.



இந்நிலையில், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி மாஸ்டர் படக்குழு மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. விஜய் பிறந்தநாளுக்கு மாஸ்டர் படத்தின் போஸ்டர் இல்லைன்னா எப்படி என்று கூறி அதை வெளியிட்டுள்ளனர். மேலும் போஸ்டரில் கொளுத்துங்கடா என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News