சினிமா
சாக்ஷி அகர்வால்

சீன தயாரிப்புகளுக்கு எதிராக களமிறங்கிய சாக்‌ஷி அகர்வால்

Published On 2020-06-20 14:02 GMT   |   Update On 2020-06-20 14:02 GMT
இனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை என்று நடிகை சாக்‌ஷி அகர்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இதனால் இந்தியர்கள் பலரும் சீன தயாரிப்புகளை புறக்கணித்து வருகிறார்கள்.

 இந்நிலையில் நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டுள்ளார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர்.



 இது குறித்து அவர் கூறும்போது, “பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க பார்க்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன். 

 இதன் தொடக்கமாக, நான் எனது டிக்டாக் கணக்கை அகற்றியுள்ளேன்.  என்னைப் பொறுத்தவரை எனது நாடு தான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும், என் நாட்டின் கண்ணியத்தைத் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். ”என்று கூறினார்.
Tags:    

Similar News