சினிமா
அனுராக் காஷ்யப்

ஊரடங்கில் புகையிலை.... மருந்து கடையில் வாங்கினீர்களா? - வில்லன் நடிகரை விளாசும் ரசிகர்கள்

Published On 2020-04-12 11:27 IST   |   Update On 2020-04-12 11:27:00 IST
ஊரடங்கில் கடைகள் அனைத்தும் மூடியுள்ள நிலையில் உங்களுக்கு மட்டும் புகையிலை எப்படி கிடைத்தது மருந்து கடையில் வாங்கினீர்களா என வில்லன் நடிகரை ரசிகர்கள் சாடியுள்ளனர்.
தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் அனுராக் காஷ்யப். இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஊரடங்கில் இணையதளம் வழியாக கலந்துரையாடும் நிகழ்ச்சியொன்றில் அனுராக் காஷ்யப் பங்கேற்றார். 

அப்போது அவர் கஞ்சா போன்ற பொருளை காகிதத்தில் அடைத்து கையில் வைத்து இருப்பது போன்ற காட்சி இருந்தது. இதை பார்த்த ஒருவர் டுவிட்டர் மூலம் மும்பை காவல்துறைக்கு புகார் அனுப்பி, “இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள கஞ்சாவை அனுராக் காஷ்யப் பயன்படுத்தி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வற்புறுத்தினார்.



அதற்கு டுவிட்டரில் பதில் அளித்த அனுராக் காஷ்யப், “நான் பயன்படுத்தியது வெறும் புகையிலைதான். இதை முழுமையாக விசாரித்து கேலி செய்பவர்களை போலீசார் திருப்திபடுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். ஊரடங்கில் கடைகள் அனைத்தும் மூடியுள்ள நிலையில் உங்களுக்கு மட்டும் புகையிலை எப்படி கிடைத்தது மருந்து கடையில் வாங்கினீர்களா? அல்லது காய்கறி கடையில் வாங்கினீர்களா? என்று மீண்டும் வலைத்தளத்தில் பலர் கேள்வி எழுப்பினர்.

இதனால் அனுராக் காஷ்யப்புக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Similar News