சினிமா
லோகேஷ் கனகராஜ்

அடுத்த பட வேலையை ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்

Published On 2020-04-11 19:07 IST   |   Update On 2020-04-11 19:07:00 IST
விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்த பட வேலையை ஆரம்பித்து இருக்கிறார்.
மாநகரம் படம் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்த லோகேஷ் கனகராஜ், கைதி பட வெற்றியின் மூலம் மேலும் உயர்ந்தார்.

தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம், ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாக இருக்கிறது.

இப்படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனம்  தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

தற்போது அடுத்தப் படத்துக்கான கதை விவாத வேலைகளை லோகேஷ் ஆரம்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  அது ரஜினி படமா என்பது விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News