சினிமா
பிக்பாஸ் மற்றும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து புகழ் பெற்ற அபிராமி திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் அபிராமி. அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.
இவர் சமூக வலைத்தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். அவரது பெயரில் போலி டுவிட்டர் கணக்குள், டிக்டாக் கணக்குகள் பெருகிவிட்ட காரணத்தால் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: நான் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் இருக்கிறேன். ஏனென்றால் இங்கு எனக்கு அதிகாரப்பூர்வ கணக்கு இருப்பதால் இங்கு எந்தப் பிரச்சினையும் வராது. இங்கிருந்தும் விரைவில் வெளியேறிவிடுவேன். டுவிட்டர் போலிக் கணக்குகளைப் போல டிக் டாக்கிலும் போலிக் கணக்குள் பிரச்சினை தருகின்றன என்று அபிராமி தெரிவித்துள்ளார்.
இவர் சமூக வலைத்தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். அவரது பெயரில் போலி டுவிட்டர் கணக்குள், டிக்டாக் கணக்குகள் பெருகிவிட்ட காரணத்தால் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார்.