சினிமா
அர்னவ் வினாயஸ், விஹானா திருமணம் செய்து கொண்ட காட்சி

மாஸ்க் அணிந்து எளிமையாக திருமணம் செய்து கொண்ட நடிகர்

Published On 2020-04-11 14:32 IST   |   Update On 2020-04-11 14:32:00 IST
ஊரடங்கு உத்தரவால் யாரும் வெளியே வர முடியாத நிலையில், நடிகர் ஒருவர் எளிமையாக திருமணம் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் அர்னவ் வினாயஸ். அதுபோல் சிவமொக்காவை சேர்ந்தவர் விஹானா. இவர்கள் இருவரும் கன்னட திரையுலகில் இளம் நடிகர், நடிகை ஆவார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் அர்னவ்- விஹானாவுக்கு திருமணம் செய்துவைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்திருந்தனர்.

இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்த கன்னட நட்சத்திர ஜோடி தீர்மானித்து இருந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இவர்களது திருமணம் நேற்று சிவமொக்காவில் எளிமையாக நடந்தது. மணமக்கள் இருவரும் முகமூடி அணிந்திருந்தனர்.

அதுபோல் இதில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். மேலும் இவர்களது திருமணம் வீடியோ, புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த கலைஞர்களும் முகமூடி அணிந்திருந்தனர்.

Similar News