சினிமா
பிரியங்கா சோப்ரா

கொரோனா வராமல் இருக்க இதை செய்யுங்கள் - பிரியங்கா சோப்ரா வலியுறுத்தல்

Published On 2020-03-13 13:43 IST   |   Update On 2020-03-13 13:43:00 IST
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வழிமுறையை கூறியுள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால், தற்போது, வெளிநாடுகளில், கட்டிப்பிடித்தோ, கைகளை குலுக்கியோ வரவேற்பதை தவிர்த்து வருகின்றனர். பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, வணக்கத்துக்கு மாறுங்க, என்று வலியுறுத்தி கைகூப்பி வணக்கம் செய்த புகைப்படங்களை மாஷ்அப் வீடியோவாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க இது ஒரு வழி என்றும் கூறியுள்ளார். இந்தியர்களின் பாரம்பரியமான வணக்கம் வைக்கும் முறைக்கு உலக நாடுகள் மாறி வருவது நல்ல வி‌ஷயம் தான் என்றும், தொற்று நோயாக பரவும் கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இது ஒரு நல்ல யோசனை என்றும் பிரியங்காவின் டுவிட்டுக்கு கீழே அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar News