சினிமா
வடிவேலு

மிஷ்கின் படத்தில் தடையை மீறி நடிக்கிறாரா வடிவேலு?

Published On 2020-03-12 03:12 GMT   |   Update On 2020-03-12 03:12 GMT
மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகர் வடிவேலு தடையை மீறி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சிம்புவை மிஷ்கின் சந்தித்து கதை சொன்னதாகவும், சிம்புவுக்கும் கதை பிடித்துப்போய் நடிக்க சம்மதம் சொல்லி இருப்பதாகவும், மாநாடு படத்தை முடித்துவிட்டு மிஷ்கின் படத்தில் நடிப்பார் என்றும் தகவல் பரவி உள்ளது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வடிவேலு படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் தயாரித்த ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் நடிக்க வடிவேலு மறுத்ததால் படத்துக்காக செலவிட்ட ரூ.10 கோடியை வடிவேலு ஈடுகட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.



இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தினர் ஷங்கர் படத்தை முடித்து கொடுக்கும்படி வடிவேலுவை நிர்ப்பந்தித்தனர். அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதையடுத்து வடிவேலு படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று பட அதிபர் சங்கம் அறிவித்தது. இதனால் புதிய படங்களுக்கு வடிவேலுவை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யவில்லை.

சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில்தான் சிம்பு படத்தில் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் வடிவேலுக்கு எதிரான தடை நீக்கப்படவில்லை என்றனர்.
Tags:    

Similar News