சினிமா
காதலருடன் சனாகான்

காதலர் மீது சிம்பு பட நடிகை மீண்டும் புகார்

Published On 2020-03-11 22:36 IST   |   Update On 2020-03-11 22:36:00 IST
தமிழில் சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் நடித்த சனாகான், காதலர் என்னை அடித்து உதைத்து இருக்கிறார் என்று மீண்டும் புகார் கூறியிருக்கிறார்.
தமிழில் சிம்புவுடன் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்த சனாகான், இந்தி திரையுலகிலும் அதிக படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். இவருக்கும், நடன இயக்குனர் மெல்வின் லூயிசுக்கும் காதல் மலர்ந்து சில மாதங்கள் ஜோடியாக சுற்றினார்கள். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

சனாகான் கூறும்போது, “நான் காதலித்த மெல்வின் ஏமாற்றுக்காரர். மோசடி பேர்வழி. நடிகைகள் உள்ளிட்ட சில பெண்களிடமும் அவருக்கு தகாத தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சியாகி காதலை முறித்துக்கொண்டேன்” என்றார். சனாகான் தன்மீது தொடர்ந்து அவதூறு கூறி பிளாக்மெயில் செய்கிறார் என்று மெல்வின் குற்றம் சாட்டி உள்ளார்.

இதற்கு பதில் அளித்து சனாகான் கூறியிருப்பதாவது:-



“நான் பிளாக்மெயில் செய்யவில்லை. காதலை முறித்தபோது அவர் முன்னால் தைரியமாக நின்றேன். அப்போது என்னை சமாதானம் செய்து மனதை மாற்ற முயன்றார். நான் அவரது பேச்சை கேட்கவில்லை. அவர் என்னை அடித்து உதைத்து இருக்கிறார். அப்போது எனது தலையில் ரத்தம் வழிந்தது. முகத்திலும் அடித்து காயப்படுத்தினார். அந்த புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.

என்னை அடித்து சித்ரவதை செய்த கொடுமைகளை அம்பலப்படுத்துவேன் என்று அவரிடம் தெரிவித்தேன். அதை பதிவுசெய்து வைத்து நான் பிளாக்மெயில் செய்வதாக குறை சொல்கிறார்.”

இவ்வாறு சனாகான் கூறினார்.

Similar News