ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஜிப்ஸி படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
ஜிப்ஸி படக்குழுவினருக்கு கமல் பாராட்டு
பதிவு: மார்ச் 09, 2020 11:37
ஜிப்ஸி படக்குழுவினருடன் கமல்
ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திரைப்பிரபலங்கள் பலரும் ஜிப்ஸி திரைப்படத்தை பாராட்டி வரும் நிலையில், படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ராஜுமுருகன், தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா, கதாநாயகி நடாஷா சிங் உள்ளிட்ட ஜிப்ஸி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். கமல்ஹாசனுடன் இயக்குநர் கெளதம் மேனனும் திரைப்படத்தை பார்த்து வாழ்த்தினார்.
இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :