சினிமா
விஜய், லோகேஷ் கனகராஜ்

விஜய் இயக்கத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ்?

Published On 2020-03-08 12:38 IST   |   Update On 2020-03-08 12:44:00 IST
மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்த காட்சியை விஜய் இயக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநகரம், கைதி படங்களை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி திரைக்கு வருகிறது. கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோரும் உள்ளனர்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் சில காட்சிகளை விஜய் இயக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு இயக்குனர் ரத்னகுமார் திரைக்கதை எழுதி உள்ளார். இவர் அமலாபால் நடித்த ஆடை வெற்றி படத்தை இயக்கியவர். மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனராஜும், ரத்னகுமாரும் ஒரு காட்சியில் நடித்துள்ளனர்.



இந்த காட்சியை விஜய், கேமரா, ஆக்‌ஷன் சொல்லி டைரக்டு செய்ததாக கூறப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் இந்த காட்சியை இயக்குனர் இருக்கையில் அமர்ந்து அவர் படமாக்கியதாகவும்,  2 இயக்குனர்களுக்கும் நடிப்பு சொல்லி கொடுத்து கேமரா கோணத்தையும் பார்த்து விஜய் டைரக்டு செய்ததை படக்குழுவினர் கைதட்டி ரசித்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

Similar News