சினிமா
சார்மி

கொரோனா குறித்து டிக்டாக்கில் கேலி செய்த நடிகைக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

Published On 2020-03-04 10:37 IST   |   Update On 2020-03-04 10:47:00 IST
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியது குறித்து கேலி செய்யும் வகையில் டிக்டாக் செய்த நடிகைக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழில், சிம்பு நடித்த 'காதல் அழிவதில்லை' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சார்மி. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது, பிரபல தெலுங்கு இயக்குனர் புரி ஜெகநாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இவர் தயாரித்த, ஐ ஸ்மார்ட் சங்கர் என்ற படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது. 

இந்நிலையில் அவர் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி கேலி செய்யும் விதமாக டிக்டாக் செய்து ஒரு வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதில், வாழ்த்துக்கள் நண்பர்களே... ஏன்னு தெரியுமா? டெல்லிக்கும் தெலங்கானாவுக்கும் கொரோனா வைரஸ் வந்துடுச்சாம். அதைதான் கேள்விப்பட்டேன். அதற்காக வாழ்த்துகள் நண்பர்களே' என்று பெரிதாகச் சிரித்தபடி தெரிவித்திருந்தார். 

இந்த வீடியோ வைரலானது. பல ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். 'சீரியசான விஷயத்துக்கு இப்படியா சிறு பிள்ளைத்தனமாக வீடியோ போடுவீங்க?' என்று திட்டி இருந்தனர். இதையடுத்து அந்த வீடியோவை நீக்கிய சார்மி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். 

Similar News