சினிமா
தனுஷ்

இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது - தனுஷ் டுவிட்

Published On 2020-02-20 10:11 GMT   |   Update On 2020-02-20 10:11 GMT
இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது என நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. நேற்று இரவு மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி காட்சிகள் படமாக்கப்பட்டது. 

அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த சம்பவம் குறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது, இனி நடக்கக் கூடாதது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், மருத்துவமனையில் இருப்பவர்கள் விரைவில் குணமடையவும் அக்குடும்பத்தில் ஒருவனாய் இறைவனை பிராத்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News