சினிமா
பார்த்திபன், விஜய்

விஜய் படத்தை இயக்க விரும்பும் பார்த்திபன்

Published On 2020-02-19 14:50 IST   |   Update On 2020-02-19 14:50:00 IST
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பார்த்திபன், விஜய்யை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் புதிய படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டைரக்டர் ஷங்கர், பேரரசு, ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபடுகின்றன.

இந்த நிலையில் நடிகர் பார்த்திபனும் விஜய் படத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவர் டுவிட்டரில் விஜய்யும், பார்த்திபனும் இணைந்தால் செம மாஸ் என்ற பதிவிட்டிருந்தார். 



இதற்கு பதிலளித்த பார்த்திபன், “மாஸுக்கு மாஸ்டரை பிடிக்கும். மாஸ்டருக்கு இந்த நண்பனை பிடிக்கும். நண்பன் படத்தை என்னையே முதலில் இயக்க சொன்னார். அழகிய தமிழ் மகனுக்கு எழுத சொன்னார். நாளை இன்னும் அடுத்த கட்டத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.பார்த்திபனின் இந்த பதிவு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. 

Similar News