சினிமா
ராஜமவுலி

பாகுபலி மொழிக்கு தனி இணையதளம்

Published On 2020-02-18 13:59 GMT   |   Update On 2020-02-18 13:59 GMT
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் இடம்பெறும் கிளிக்கி என்கிற மொழிக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது.
பாகுபலி படத்தில் வில்லன் கூட்டமான காளகேயர்கள் பேசும் மொழி மிகவும் வித்தியாசமாக இருக்கும். படத்துக்கு தமிழ் வசனம், பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி இதற்காகவே புது மொழியை கண்டுபிடித்து அதை படத்தில் பயன்படுத்தினார். இப்போது இந்த மொழியை அனைவரும் கற்றுக்கொள்ளும் வகையில் தனி இணையதளம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். 



கிளிக்கி என்ற இந்த மொழிக்காக 3000 வார்த்தைகளை உருவாக்கி அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த இணையதளத்தை இயக்குனர் ராஜமவுலி தொடங்கி வைத்தார். பாகுபலி படத்திற்கு பின் ராஜமவுலி தற்போது ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது.
Tags:    

Similar News