சினிமா
நடிகை அடா சர்மா

மாப்பிள்ளை தேடும் அடா சர்மா

Published On 2019-09-26 19:19 IST   |   Update On 2019-09-26 19:19:00 IST
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள அடா சர்மா, திருமணம் செய்துக் கொள்ள மாப்பிள்ளை தேடுவதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கு படங்களில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் அடா சர்மா. இவர் தமிழிலிலும் சில படங்களில் நடித்துள்ளார். தான் திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை தேடுவதாக தெரிவித்துள்ளார். அதற்காக அவர் போட்டுள்ள நிபந்தனைகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளன. 

’வெங்காயம் தின்ன கூடாது, வீட்டில் ஜீன்ஸ் அணியலாம் ஆனால் வெளியில் சென்றால் பாரம்பரிய உடை தான், தினமும் மூன்று வேளையும் சிரித்துக்கொண்டே சமைக்க வேண்டும், மதுபானம் மற்றும் இறைச்சி சாப்பிடக்கூடாது, எல்லா விதமான மொழி இந்திய படங்களையும் மதிக்க வேண்டும் என அடா சர்மா நிபந்தனை தெரிவித்துள்ளார்.



அதிலும் முக்கியமாக சாதி, மதம், நிறம், ஜாதகம், ஷூ சைஸ், விசா, நீச்சல் திறமை,  இன்ஸ்டா பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை ஆகியவை குறித்து கவலை இல்லை என அடா சர்மா கூறியுள்ளார்.

Similar News