சினிமா

இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரபாஸ்

Published On 2019-04-11 11:17 IST   |   Update On 2019-04-11 11:30:00 IST
இந்திய சினிமாவில் முக்கிய பிரபலமமாக வலம் வரும் பிரபாஸ், தற்போது முக்கிய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். #Prabhas
தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வந்த பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய சினிமா ரசிகர்களால் அறியப்படும் முக்கிய நபராக விளங்குகிறார். அவர் தற்போது சுஜீத் இயக்கத்தில் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பொதுவாக சமூக வலைதளங்களில் அதிக விருப்பமில்லாமல் இருக்கும் பிரபாசுக்கு பேஸ்புக்கில் மட்டுமே கணக்கு உள்ளது. அதில் அவரை ஒரு கோடியே 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.



பேஸ்புக் தவிர்த்து வேறு எந்த விதமான சமூக வலைதளங்களிலும் இல்லாத பிரபாஸ் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்ஸ்டாகிராமில் ஒரு கணக்கை தொடங்கியிருக்கிறார்.

பிரபாஸின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழிலை பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ரசிகர்களுடன் கொஞ்சம் நெருக்கமாக இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். #Prabhas #Saaho #PrabhasOnInstagram

Tags:    

Similar News