சினிமா

வெப் தொடர்களுக்கு சென்சார் கூடாது - ராதிகா ஆப்தே

Published On 2019-03-31 06:59 GMT   |   Update On 2019-03-31 06:59 GMT
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டியில், வெப் தொடர்களுக்கு சென்சார் கூடாது என்று கூறியிருக்கிறார். #RadhikaApte
‘சிந்திக்கும் ஆற்றல் நிறைந்த சிறந்த நடிகை’ என்ற பெயரை பெற்றிருக்கிறார், ராதிகா ஆப்தே. அதுவே அவருக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மொழிகளைக் கடந்து தனது அர்த்தமுள்ள நடிப்பால் முத்திரை பதிக்கும் ராதிகா ஆப்தே, ஒரே நேரத்தில் சினிமாவிலும் நடிக்கிறார். வெப் தொடர்களிலும் தோன்றுகிறார். அவரது பேட்டி:

தற்போது புகழ் பெற்றுவரும், வெப் தொடர்களுக்கு ‘சென்சார்’ அவசியம் என்று நினைக்கிறீர்களா?

வெப் தொடர்களுக்கு எந்த ‘சென்சார்ஷிப்’பும் கூடாது என்றே நான் கருதுகிறேன். அதற்கு என்ன காரணம் என்றால், மக்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்களோ, அதை எப்படியாவது பார்க்கத்தான் போகிறார்கள்.



மீடூ இயக்கம், திரைத்துறையில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறதா?

மீடூ இயக்கம் ஏற்படுத்திய பெரிய தாக்கம், இனி ஆண்கள் தவறு செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்கள். பெண்களும் தங்கள் மீதான அத்து மீறல்கள் குறித்துப் பேச வெட்கப்பட வேண்டியதில்லை என்று உணர்ந்திருக்கிறார்கள். இதெல்லாம் பெரிய முன்னேற்றம் தான்.
Tags:    

Similar News