சினிமா

எதிர்ப்பை மீறி என்.டி.ராமராவ் படத்தை வெளியிட தேர்தல் கமிஷன் அனுமதி

Published On 2019-03-27 15:01 GMT   |   Update On 2019-03-27 15:01 GMT
தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்ப்பை மீறி என்.டி.ராமராவ் படத்தை வெளியிட தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. #NTR #Election
என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து கடந்த ஜனவரியில் ‘என்.டி.ஆர். கதாநாயகடு’ என்ற படமும், இதன் இரண்டாம் பாகமாக என்.டி.ஆர். மகாநாயகடு என்ற படமும் வெளிவந்தன. இதில் என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்து இருந்தார்.

இரண்டு படங்களையும் அதிக பொருட்செலவில் படமாக்கி இருந்தனர். ஆனால் எதிர்பார்த்த வசூல் இல்லாமல் நஷ்டம் அடைந்தது. இந்த படத்தில் என்.டி.ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி சம்பந்தமான காட்சிகள் இல்லை. இந்த விடுபட்ட கதையை தொகுத்து ‘லட்சுமி என்.டி.ஆர்’ என்ற பெயரில் புதிய படத்தை ராம்கோபால் வர்மா இயக்கினார்.

இதில் என்.டி.ராமராவுக்கு சந்திரபாபு நாயுடு துரோகம் செய்து ஆட்சியை கைப்பற்றியதுபோல் காட்சிகள் உள்ளன. படத்தை திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்தன. இந்த படம் சந்திரபாபு நாயுடுவுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதுபோல் உள்ளது என்றும், எனவே தேர்தல் காலத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து படத்தை தேர்தல் கமிஷனுக்கு தயாரிப்பாளர் அனுப்பிவைத்தார். படத்தை பார்த்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று கூறி படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.
Tags:    

Similar News