சினிமா

குழந்தை எப்போது? - சமந்தா பதில்

Published On 2019-03-23 13:36 IST   |   Update On 2019-03-23 13:36:00 IST
நடிகை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் அளித்த பதிலை பார்ப்போம்.... #Samantha #NagaChaitanya
தமிழில் சமந்தா நடிப்பில் அடுத்து சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாக இருக்கிறது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, மிஷ்கின் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

பகத் பாசிலுக்கு மனைவியாக வேம்பு என்ற வேடத்தில் சமந்தா நடித்துள்ளார். அவர் வரும் முதல் காட்சியே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்கிறார்கள். சமந்தா குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நான் தாயான பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பேன். என் குழந்தை தான் என் உலகமாக இருக்கும். நான் குழந்தையாக இருந்தபோது சில பிரச்சனைகளை சந்தித்தேன். எனக்கு நடந்தது போன்று என் குழந்தைக்கும் நடக்க விடமாட்டேன்.

அதனால் நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பேன். எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து வைத்துள்ளேன். அதை இப்போது சொல்ல முடியாது. இதற்கு மேல் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றால் நாகசைதன்யாவிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.’

இவ்வாறு அவர் கூறினார். #Samantha #NagaChaitanya

Tags:    

Similar News