சினிமா

இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்

Published On 2019-03-17 09:20 GMT   |   Update On 2019-03-17 09:20 GMT
இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு என்று இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார். #Imman
கனடா இசைக்கலைஞர்கள் சப்தஸ்வரங்கள் 2 என்ற இசை ஆல்பத்தை வெளியீட்டார்கள். இந்த விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் டி.இமான், தினா, பாடலாசிரியர் அருண்பாரதி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

விழாவில் இசை அமைப்பாளர் இமான் பேசும்போது, ‘இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் யுனிவர்செல் வோக்கல் டீமிக்கு எனது வாழ்த்துகள். கனடாவில் நான் இரண்டு இசை ஆல்பம் பண்ணியிருக்கிறேன். கனடா எனக்கு நிறைய கெளரவம் கொடுத்திருக்கிறது. தமிழ் இருக்கை அமைப்பிற்கான அம்பாசிடராக இருக்கும் பெருமையையும் பெற்றிருக்கிறேன். அங்குள்ள திறைமையாளர்கள் இங்குள்ளவர்களோடு இணைந்து இப்படி ஒரு ஆல்பத்தை கொடுத்திருக்கிறார்கள். 



இதுபோல் இன்னும்  நிறைய ஆல்பங்கள் அவர்கள் பண்ண வேண்டும். இந்தவிழா சாதாரண இசை ஆல்ப வெளியீட்டு விழா போல் அல்ல. ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா போன்று இருந்தது. இந்தக் குழந்தைகள் இன்னும் பெரிதாக சாதிக்க வேண்டும். அவர்கள் மொழியை உச்சரிக்கும் விதமும் அவ்வளவு அழகாக இருந்தது. இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு" என்று வாழ்த்த்தினார்.

விழாவில் கன்னட ஒருங்கிணைப்பாளர் டொனால்ட் ஜே அனைவரையும் வரவேற்று பேசினார். யுனிவர்செல் வோக்கல் நிறுவனர் ரூபன்ராம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News