சினிமா

பெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி

Published On 2019-02-17 16:43 IST   |   Update On 2019-02-17 16:43:00 IST
இன்று நடைபெற்ற பெப்சி தலைவருக்கான தேர்தலில் ஆர்.கே.செல்வமணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். #RKSelvamani #FefsiElection
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூன்று பதவிக்கு மட்டும் இன்று காலை (பிப்ரவரி 17 ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடந்தது. துணைத்தலைவர்கள் 5 பேர், இணைச்செயலாளர்கள் 5 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் 10 பேரும் செல்வமணி ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்கள் 65 பேரும் வாக்களித்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்கே.செல்வமணி 49 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டிகே.மூர்த்தி 16 வாக்குகள் பெற்றார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சண்முகம் 50 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுப்ரீம் சுந்தர் 15 வாக்குகள் பெற்றார். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சுவாமிநாதன் 47 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சந்திரன் 18 வாக்குகளை பெற்றார். 

இந்தத் தேர்தலில் அனைத்து பதவிகளையும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் அணியினரே கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணியினர் 2019-2021-ம் ஆண்டு வரையிலும் பெப்சி நிர்வாகத்தைக் கவனிப்பார்கள்.
Tags:    

Similar News