சினிமா

இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் தர்மபிரபு படக்குழு

Published On 2019-02-12 10:45 IST   |   Update On 2019-02-12 10:45:00 IST
முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு, திலீபன், ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகும் `தர்மபிரபு' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. #Dharmaprabhu #YogiBabu
விமல், வரலட்சுமி நடித்துள்ள `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக இயக்கிவரும் படம் `தர்மபிரபு'. யோகி பாபு, `வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இதில், யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள். அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.



மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்கிறார். லோகேஷ் படத்தொகுப்பையும், பாலசந்தர் கலை பணியையும் கவனிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் இந்த படத்தை தயாரிக்கிறார். #Dharmaprabhu #YogiBabu

Tags:    

Similar News