சினிமா

சின்னத்திரை உதவி இயக்குனர்கள் உண்ணாவிரதம்

Published On 2019-02-10 08:25 GMT   |   Update On 2019-02-10 08:25 GMT
உரிய சம்பளம் கேட்டு சின்னத்திரை உதவி இயக்குனர்கள் சங்கம் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறார்கள். #Protest #AssistantDirectors
சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்து வருகிறது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அருகில் காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டத்தை இயக்குனர் பாக்கியராஜ் தொடங்கி வைத்தார். 



அதன்பின் அவர் பேசும் போது, ‘இது மிகவும் அவசியமான கோரிக்கை தான். இயக்குனர்கள் எப்படி தங்கள் சம்பளத்தை தயாரிப்பாளர்களிடம் இருந்து பெறுகிறார்களோ அதேபோல் உதவி இயக்குனர்களுக்கும் வழங்க வேண்டும். பெரிய தயாரிப்பாளர் என்றால் அதற்கு தகுந்தாற்போலவும் சின்ன தயாரிப்பாளர் என்றால் அதற்கு தகுந்தாற்போலவும் வழங்கலாம். ஆனால் சம்பளத்தை முறையாக நிர்ணயம் செய்ய வேண்டும். விரைவில் பெப்சி தேர்தல் வர இருக்கிறது. அது முடிந்த உடன் இந்த கோரிக்கையை அவர்களுக்கு எடுத்து செல்வேன்’ என்றார்.
Tags:    

Similar News