சினிமா

மாரத்தான் போட்டியில் காஜல் அகர்வால்

Published On 2018-12-30 18:12 IST   |   Update On 2018-12-30 18:12:00 IST
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மாரத்தான் போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கிறார். #KajalAggarwal
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் இணைந்துள்ளார். அந்தப் படத்துக்காக தற்காப்பு கலை பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.

காஜல் அகர்வால் நடிப்புடன் மாரத்தான் போன்ற போட்டிகளில் ஆர்வம்காட்டி வருகிறார். கடந்த ஆண்டு ‘அமைதியை யோசி’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார்.

டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மும்பையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இதில் பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். 16-வது முறையாக வரும் ஜனவரி 20-ந்தேதி மும்பையில் மாரத்தான் போட்டியை நடத்த உள்ளது.



இந்த மாரத்தானில் அனைவரும் கலந்துகொள்ள காஜல் அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார். “இந்த முறை நான் பழங்குடியின விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்காக 2019 டாடா மும்பை மாரத்தானில் கலந்துகொள்கிறேன். அரக்குவில் உள்ள பழங்குடியினருக்கு அவர்களது விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பு மேம்படவும், திறமை வாய்ந்த பழங்குடியின விளையாட்டு ஆளுமைகளுக்குச் சக்தி வாய்ந்த உணவு கிடைத்திடவும் வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News