சினிமா

சர்ச்சையை கிளப்பிய போஸ்டர் - ஹன்சிகா பட இயக்குநர் விளக்கம்

Published On 2018-12-19 05:55 GMT   |   Update On 2018-12-19 05:55 GMT
யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் மஹா படத்தின் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், இதுகுறித்து இயக்குநர் ஜமீல் விளக்கம் அளித்துள்ளார். #Maha #Hansika #Hansika50
தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்த படத்தின் இரு போஸ்டர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

அதில் ஒரு போஸ்டரில் ஹன்சிகா புகைப்பிடிக்கும் தோற்றம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை காவி உடையில் ஹன்சிகா கஞ்சா புகைக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.


இதை எதிர்த்து ஹன்சிகா மற்றும் இயக்குநர் மீது பா.ம.க பிரமுகர் வழக்கு தொடர்ந்துள்ளார். மஹா படத்தின் போஸ்டர் இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும், இளம்பெண்களை திசைதிருப்பும் விதமாகவும் உள்ளது என்று மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு குறித்து இயக்குநர் ஜமீலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,

“ஒரு இயக்குனராக புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். சாதி அல்லது மதம் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. நான் இந்து, முஸ்லிம் என்பதை விட மனிதம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். புகைப்பிடிக்கும் படத்தை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்க வேண்டும். தயவு செய்து சாதி, மத கோணத்தில் அணுக வேண்டாம். கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை சந்திப்போம். இதுகுறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



நடிகை ஹன்சிகா கூறும்போது “மஹா எனது 50-வது படம். அந்த படம் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்ப படத்தின் போஸ்டர் பற்றி பேசுகிறார்கள். இது ஒரு சாம்பிள்தான். இன்னும் நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன” என்றார். #Maha #Hansika #Hansika50

Tags:    

Similar News