சினிமா

வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் டாப்சி

Published On 2018-12-15 12:14 GMT   |   Update On 2018-12-15 12:14 GMT
பாலிவுட்டுக்கு சென்று அங்கு பிசியாகியிருக்கும் டாப்சி, கேம் ஓவர் படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ள நிலையில், சினிமா நிரந்தரம் கிடையாது என்று கூறியிருக்கிறார். #TaapseePannu #GameOver
டாப்சி இந்தியில் அறிமுகமாகி முன்னணி நடிகையான பிறகு தமிழ், தெலுங்கு பக்கம் கவனம் செலுத்துவதில்லை. கதை கேட்கக்கூட மறுக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் விதமாக தென் இந்திய சினிமா பக்கம் மீண்டும் திரும்பியுள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நிறைய படங்களில் நடிக்கிறதைவிட, தரமான சில படங்கள்ல நடிச்சாலே போதும், தமிழ் மக்கள் மனசுல இடம் பிடிச்சிடலாம்னு நினைக்கிறேன். `கேம் ஓவர்’ அப்படிப்பட்ட படம்தான். தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆகுற இந்தப் படத்துக்கு நானும் ஒரு தயாரிப்பாளர். வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கேரக்டர்.



என் முதல் தெலுங்கு படத்தோட தயாரிப்பாளர் நடிகை லக்ஷ்மி மஞ்சு மட்டும்தான் எனக்கு இருக்குற ஒரே தோழி. நண்பர்களோட எமோ‌ஷனலா நெருக்கம் ஆகிவிட்டால், சினிமாவை விட்டு வெளியேறுவது கஷ்டமா இருக்கும். அதனால், நானும் அதிகமா அதுக்கு மெனக்கெடுறதில்லை. ஏன்னா, சினிமா நிரந்தரம் கிடையாது’ என்று கூறி இருக்கிறார். #TaapseePannu #GameOver
Tags:    

Similar News