சினிமா

பேண்டஸி காமெடி படத்தில் சமந்தா - நாக சவுரியா

Published On 2018-12-11 09:21 GMT   |   Update On 2018-12-11 09:21 GMT
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா - நாக சவுரியா நடிப்பில் உருவாகும் படம் பேண்டஸி கலந்த காமெடி படமாக உருவாகிறது. #SamanthaAkkineni #NagaShourya
2014-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘மிஸ் க்ரானி’. சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் இப்படம் முதலில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதன் கதைப்படி வயதானவர் மற்றும் இளமையானவர் என்ற இரண்டு கதாபாத்திரங்களிலுமே சமந்தா நடித்து வருகிறார். சமந்தாவின் தோழியான நந்தினி ரெட்டி இயக்கி வரும் இப்படத்தில், நாக சவுரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமந்தா நடிப்பதால் இப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளது படக்குழு.



கணவனை இழந்த 74 வயதான பெண் ஒருத்தி, தான் குடும்பத்துக்குப் பாரமாக இருப்பதை உணர்கிறாள். ஒரு போட்டோ ஸ்டுடியோவுக்கு செல்லும் அவள், மந்திர சக்திகள் மூலம் 20 வயது பெண்ணின் தோற்றத்தைப் பெறுகிறாள். இதன்பிறகு ஏற்படும் சிக்கல்களை சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையுடனும் திரைக்கதையாக அமைத்திருப்பார்கள். 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் வெளியான இப்படம், 8.65 மில்லியன் டிக்கெட்டுகள் விற்று மாபெரும் வெற்றி பெற்றது. #SamanthaAkkineni #NagaShourya

Tags:    

Similar News