சினிமா

இரண்டு வாரத்தில் 20 படங்கள் ரிலீஸ் - திரையரங்கு கிடைப்பதில் சிக்கல்

Published On 2018-12-10 06:01 GMT   |   Update On 2018-12-10 06:01 GMT
அடுத்தடுத்து பண்டிகை நெருங்குவதால், அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் 20 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த படங்களுக்கு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #TFPC #ProducersCouncil
படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த தயாரிப்பாளர் சங்கம் ஒரு கமிட்டி அமைத்து தேதிகளை ஒதுக்கி கொடுத்து வருகிறது. 

வாரம் தோறும், தணிக்கை செய்யப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படங்களை மட்டும் வெளியிட அனுமதி கொடுத்தது. சங்கத்தில் அனுமதி பெறாத படங்களை திரையிட தடையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி 52 புதிய படங்களை திரையிட அனுமதி கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தை பட அதிபர்கள் வற்புறுத்தினர். இதைத்தொடர்ந்து 2 பண்டிகைகளிலும் எவ்வளவு படங்களை வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் என்று சங்கம் அனுமதி வழங்கியது.

இதனால் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வருகின்றன. வருகிற 14-ந் தேதி விக்ரம் பிரபு நடித்த துப்பாக்கி முனை, பிரசாந்தின் ஜானி, நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல், பயங்கரமான ஆளு, துலாம், பிரபு, திரு, ஒடியன், சமுத்திர புத்திரன், ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம் ஆகிய 11 படங்களை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.



வருகிற 20-ந் தேதி விஜய் சேதுபதியின் சீதக்காதி, 21-ந் தேதி ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுசின் மாரி-2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன. தியேட்டர்கள் பிடிப்பதில் இந்த படங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. 

பொங்கல் பண்டிகையையொட்டி பேட்ட, விஸ்வாசம் உள்ளிட்ட 22 படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #TFPC #ProducersCouncil

Tags:    

Similar News