சினிமா

அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் லீக் - போலீசில் புகார்

Published On 2018-11-08 11:24 IST   |   Update On 2018-11-08 11:24:00 IST
அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் லீக்கானதால் மும்பை போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். #AksharaHaasan
அக்‌ஷராஹாசனின் தனிப்பட்ட  படங்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் உலா வந்தது. இதுகுறித்து இன்ஸ்ட்ராகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அக்‌ஷராஹாசன், அந்தப் படங்களை பதிவிட்டது யார் என்பது குறித்து, விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், இதுதொடர்பாக மும்பை காவல் துறையை அணுகி இருப்பதாகவும், இச்சம்பவம் தனக்கு வேதனையை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

நாடு முழுவதும் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்தச் சூழ்நிலையிலும், சிலர் அவர்களது அர்ப்ப சுகத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News