சினிமா

சின்னத்திரை நடிகர் விஜயராஜ் காலமானார்

Published On 2018-11-04 05:33 GMT   |   Update On 2018-11-04 05:33 GMT
பழனியில் பிரபல சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #vijayaraj
பழனி இடும்பன்மலை பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 43). பிரபல நடிகரான இவர் கோலங்கள், மெட்டிஒலி, நாதஸ்வரம் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். மேலும் எம்டன் மகன் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக விஜயராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்துள்ளார். இன்று வீட்டில் இருந்த விஜயராஜூக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவர் மயங்கினார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு விஜயராஜ் இறந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.  #vijayaraj

Tags:    

Similar News