சினிமா

கருப்பு காக்காவை வெளியிட்ட விஜய் மில்டன்

Published On 2018-07-13 15:59 GMT   |   Update On 2018-07-13 16:46 GMT
நான்கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கருப்பு காக்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் விஜய்மில்டன் வெளியிட்டிருக்கிறார். #KaruppuKaakka
‘கருப்பு காக்கா’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இதில் நான் கடவுள் ராஜேந்திரன், டேனியல், ராட்டினம் சுவாதி, ஜார்ஜ், ஆதித்யா டிவி டாப்பா, அஞ்சலி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தருண் பிரபு என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

காமெடி கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் பேய் படமாக ‘கருப்பு காக்கா’ உருவாகியுள்ளது. பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுத சென்ற ஒரு நபரோட வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 



இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இப்படத்தை வசந்த் மற்றும் பிரகாஷ் தயாரித்திருக்கிறார்கள்.
Tags:    

Similar News