சினிமா

விஐபி படம் காப்பி அடிக்கப்பட்ட வழக்கு - தனுசுக்கு ஆதரவாக ஐகோர்ட்டு தீர்ப்பு

Published On 2018-07-04 06:04 GMT   |   Update On 2018-07-04 06:04 GMT
தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `வேலையில்லா பட்டதாரி' படத்தை காப்பி அடித்துவிட்டதாக தனுஷ் தொடர்ந்த வழக்கில், தனுசுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. #VIP #Dhanush
தனுஷ் தயாரித்து கதாநாயகனாக நடித்து கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் `வேலையில்லா பட்டதாரி'. தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம், தெலுங்கிலும் `ரகுவரன் பிடெக்' என்ற பெயரில் வெற்றி பெற்றது. 

இந்த படத்தை ரீமேக் செய்யும் உரிமம் பெறாமல், மராட்டி மொழியில் ’மஹ்ஜா நா சிவாஜி’ என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. காட்சிகள் மட்டும் அல்லாமல் தமிழில் இடம்பெற்ற பாடல்களில் இரண்டையும் காப்பி அடித்து வைத்திருந்தனர். அனுமதி பெறாமல் தனது படத்தை காப்பி அடித்த மராட்டிய தயாரிப்பாளர்கள் பிரனீதா பவார், சக்கரவர்த்தி ஆகியோர் மீது தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்தார். இரண்டு படங்களையும் ஆராய்ந்த ஐகோர்ட்டு, தனுசின் படம் காப்பி அடித்து இருப்பதை உறுதி செய்தது. மஹ்ஜா நா சிவாஜி படத்தின் லாபக்கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் தனுசுக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. #VIP #Dhanush

Tags:    

Similar News