சினிமா

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்

Published On 2018-05-26 18:08 IST   |   Update On 2018-05-26 18:08:00 IST
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி வரும் `ஊர காணோம்' என்ற படத்தை செவிலி, மோகனா படங்களை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இயக்கி வருகிறார். #OoraKanom
மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையை `ஊர காணோம்' என்ற பெயரில் திரைப்படமாக்கி வருகிறார்கள்.

கே.எஸ்.சரவணகுமார் வேலவர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் `ஊர காணோம்' என்ற வித்தியாசமான பெயரில் புதிய படமொன்றை தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தை செவிலி, மோகனா போன்ற படத்தை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இயக்கிவருகிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையை, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். நவம்பர் மாத பனிபொழிவில் இந்தப்படத்தின் முக்கியாமான காட்சிகள் மலைகிராமத்தில் படமாக்கப்பட்டது.



பிர்லா, ஷா, பவித்ரா, நெல்லைசிவா, தவசி, தங்கதுரை, மும்பைசீனுஜி, சசி, மகேஷ் ஏட்டா, `பிச்சைக்காரன் ஜான்', குணாஜி, வெங்கல்ராவ், கீதா, ஜெயக்குமார் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். 

சந்திரா சத்யராஜ் என்ற பெண் இசையமைப்பாளர் இசையமைக்கும் இந்த படத்தில், பிரியா கிருஷ்ணன், பரிமளாதேவி என இரண்டு பெண் கவிஞர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். #OoraKanom

Tags:    

Similar News