சினிமா

சினிமாவில் ஆணாதிக்கம் - ஸ்ரேயா வருத்தம்

Published On 2018-05-25 17:14 IST   |   Update On 2018-05-25 17:14:00 IST
தமிழில், ரஜினி, விஜய்யுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா, சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் இருப்பதாக கூறியிருக்கிறார். #Shriya
வெளிநாட்டு காதலரை காதல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளாக கேட்டுவரும் ஸ்ரேயா தமிழ் சினிமாவை சாடியுள்ளார். 

‘என்னைத் தேடி பல பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் கதை பிடிக்காமல் தவிர்த்துவிடுகிறேன். எல்லா படங்களிலுமே ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது. நடிகைகளின் முக்கியத்துவம் குறைவாக உள்ளது.



கதை சொல்லும்போது பெரிதாக தெரியும் கதாபாத்திரம் படம் வரும்போது சிறியதாக மாறிவிடுகிறது. தமிழை விட தெலுங்கில் தான் எனக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்தன’ என்று கூறியிருக்கிறார். ஸ்ரேயா தமிழில் ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
Tags:    

Similar News