சினிமா

78 வயது ரசிகையை கவுரவித்த ரஜினி

Published On 2018-05-18 14:27 IST   |   Update On 2018-05-18 14:27:00 IST
ரசிகர்களுக்கு அவ்வப்போது இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது 78 வயது ரசிகையை கவுரவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். #Rajini #Rajinikanth
நடிகர் ரஜினிகாந்த் தற்போது படங்களில் பிசியாக இருந்தாலும், அரசியல் பணியிலும் தீவிரம் காண்பித்து வருகிறார். தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறார்.

ரஜினி மக்கள் மன்ற காவலர்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதற்கு இன்னுமொரு உதாரணம் நடந்திருக்கிறது. 

திருவொற்றியூரைச் சேர்ந்தவர் திருமதி சாந்தா. இவருக்கு வயது 78. தீவிர ரஜினி ரசிகையான சாந்தா, ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததுமே மகிழ்ச்சியுடன் களமிறங்கினார்.

ரஜினி மக்கள் மன்ற கிளை உறுப்பினர் சேர்க்கை களப்பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் சாந்தாவின் ஒரே விருப்பம், ரஜினியைச் சந்தித்து தனது பணிகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான்.

இது குறித்த தகவலை ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று ரஜினியிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சாந்தாவை தன் இல்லத்துக்கு இன்று வரவழைத்த ரஜினிகாந்த், அவருக்கு பொன்னாடை அணிவித்து, அவரது களப்பணிக்கு கவுரவம் தந்தார்.
Tags:    

Similar News