சினிமா

சுனைனாவை தமிழ் சினிமா கவனிக்கவில்லை - கிருத்திகா உதயநிதி

Published On 2018-05-14 15:46 GMT   |   Update On 2018-05-14 15:46 GMT
‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காளி’ படத்தின் கதாநாயகியான சுனைனாவை தமிழ் சினிமா கவனிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காளி’. இதில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கிருத்திகா உதயநிதி பேசும்போது, ‘பெண்கள் தினத்தில் தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்கு கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையை கேட்டார். 

எனக்கும் தயாரிப்பாளர் பாத்திமாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கலை இயக்குனர் சக்தி படத்துக்கு மிகப்பெரிய பலம். உயிரை பணய வைத்து, ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தார் ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி. வில்லனாக நடிக்க ஆர்கே சுரேஷ் ஒப்புக் கொண்டது பெரிய விஷயம். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன். 



4 கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன். பெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை. திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள்’ என்றார். 
Tags:    

Similar News