சினிமா

உலக சினிமாவில் வரவேற்பை பெறும் தனுஷ் படம்

Published On 2017-11-02 09:08 IST   |   Update On 2017-11-02 09:08:00 IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனஷின் படத்திற்கு உல சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமைகளை கொண்ட நடிகர் தனுஷ்.

தமிழ் சினிமா மட்டும்லாலது, பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருக்கும் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த `வேலையில்லா பட்டதாரி-2' போதிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா', வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் பிசியாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்கு உலக சினிமா சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.



இப்படத்தின் பெரும்பாலான நாடுகளின் வெளிநாட்டு உரிமையை சோனி பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது. இப்படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்த ஆண்டு முதல் பாதியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News