சினிமா

மீண்டும் தனுசுடன் இணைந்து பணிபுரிவேன்: அனிருத்

Published On 2017-01-09 13:46 IST   |   Update On 2017-01-09 13:46:00 IST
சிறிய இடைவேளைக்குப் பிறகு தனுசுடன் மீண்டும் இணைய உள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை பார்க்கலாம்.
தனுஷ் உறவினர் இசை அமைப்பாளர் அனிருத். இவருக்கு தனது படங்களில் தொடர்ந்து இசை அமைக்க தனுஷ் வாய்ப்பு  அளித்து வந்தார். சமீபகாலமாக தனுஷ் தனது படங்களில் அனிருத்தை தவிர்த்து வருகிறார்.

இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அனிருத் அளித்துள்ள விளக்கம் இது....

“தனுஷ் எப்போதும் என் நலம் விரும்பி. எனக்கே என்மீது நம்பிக்கை இல்லாமல் இருந்த போது என்னை நம்பிய ஒரே ஆள்  தனுஷ்தான்.

ஒரு படைப்பாளி அடுத்தடுத்து ஒருவரோடு மீண்டும் மீண்டும் சேர்ந்து பணிபுரிந்தால், பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி இருக்காது.  போர் அடித்து விடும். ரசிகர்களுக்கும் போர் அடித்து விடும்.

இதனால் தான் நானும் தனுசும் ஒரு குட்டி பிரேக் எடுத்திருக்கிறோம். 4 அல்லது 5 படங்கள் கழித்து நாங்கள் இருவரும்  மீண்டும் ஒன்றாக பணியாற்றுவோம்” என்றார்.

Similar News