சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 20 வயது வாலிபர் கைது
- ஜீஷன் சித்திக் அலுவலகத்திற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 20 வயது வாலிபர் கைது.
பாலிவுட் நடிகரான சல்மான் கான் மற்றும் சமீபத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பாபா சித்திக்கின் மகன் ஜீஷான் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடிவந்தனர். இந்த நிலையில் மும்பை போலீசார். நொய்டாவின் செக்டார் 39-ல் இருந்து மிரட்டல் விடுத்த முகமது தையப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை பந்த்ராவில் உள்ள ஜீஷான் சித்திக் அலுவலகத்திற்கு, தாங்கள் கேட்கும் பணம் தரவில்லை என்றால் கொலை செய்யப்படுவாரக்ள் என சல்மான் கானுக்கு மிரட்டல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள ஸ்டாஃப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் மிரட்டல் விடுத்த நபர் முகமது தையப் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.