இது புதுசு

இணையத்தில் லீக் ஆன வால்வோ XC40 பேஸ்லிப்ட் அம்சங்கள்

Published On 2022-09-19 10:51 GMT   |   Update On 2022-09-19 10:51 GMT
  • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது XC40 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய வால்வோ காரில் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் XC40 பேஸ்லிப்ட் மற்றும் XC90 பேஸ்லிப்ட் மாடல்களை செப்டம்பர் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு கார்கள் அறிமுகமாகும் முன்பே புதிய XC40 பேஸ்லிப்ட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

தற்போது லீக் ஆன தகவல்களின் படி புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 12.3 இன்ச் அளவில் இரண்டாம் தலைமுறை டிரைவர் டிஸ்ப்ளே, க்ரிஸ்டல் கியர் நாப், இரண்டு டைப் சி போர்ட்கள், புதிய இண்டீரியர் தீம், ஆக்டிவ் நாய்ஸ் கண்ட்ரோல், ஏர் பியூரிபையர், மல்டி பில்ட்டர், ஆட்டோ டிம்மிங் ORVM-கள், ஆப்பிள் கார்பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.


புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் டிரைவ் மோட் ஸ்விட்ச்கள், டூயல் டோன் ஆப்ஷன், ரோட் சைன் விவரங்கள், ஹெட்லேம்ப் ஸ்டேடிக் பெண்டிங் பன்ஷன் உள்ளிட்டவை நீக்கப்படுகிறது. புதிய மாடல் க்ரிஸ்டல் வைட், ஜார்ட் புளூ, பியுஷன் ரெட், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

2022 வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் டர்போ என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யுவி மாடல் ஒற்றை வேரியண்டில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த கார் வால்வோ XC40 அல்டிமேட் B4 மைல்டு ஹைப்ரிட் எனும் பெயரில் கிடைக்கிறது.

Tags:    

Similar News