இது புதுசு

விரைவில் இந்தியா வரும் புதிய XC40 - வால்வோ அசத்தல்

Update: 2022-08-17 11:42 GMT
  • வால்வோ கார் இந்தியா நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தில் புது 2023 வால்வோ XC40 மாடலை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
  • இந்த காரின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

வால்வோ கார் இந்தியா நிறுவனம் 2023 வால்வோ XC40 மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. மேலும் முன்பதிவு செய்த இரண்டு மாதங்களில் கார் டெலிவரி செய்யப்பட்டு விடும் என வால்வோ இந்தியா தெரிவித்து உள்ளது. அந்த வகையில் 2023 வால்வோ XC40 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

மேம்பட்ட வால்வோ XC40 மாடல் C40 கூப் எஸ்யுவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் டிஃபைன்டு ஹெட்லேம்ப்கள், ஃபிரேம்லெஸ் கிரில், புதிய முன்புற பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் உள்ளதை போன்றே புதிய XC40 மாடலிலும் லெதர் இல்லா இருக்கைகள் வழங்கப்படலாம்.


இத்துடன் இந்த கார் முற்றிலும் புதிய எக்ஸ்டீரியர் நிற ஆப்ஷன்கள், அலாய் வீல் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். 2023 வால்வோ XC40 மாடல் அதிக மைலேஜ் வழங்குகிறது. இதில் உள்ள மைல்டு ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்கள் இதனை உறுதிப்படுத்துகிறது. வால்வோ நிறுவனத்தின் எதிர்கால திட்டப்படி மைல்டு ஹைப்ரிட், பிளக்-இன் மற்றும் முழுமையான எலெக்ட்ரிக் மாடல்களை மட்டுமே அறிமுகம் செய்ய இருக்கிறது.

முன்னதாக 2030 வாக்கில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன பிராண்டாக மாற இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக வால்வோ நிறுவனம் அறிவித்து இருந்தது. இதே காரின் முழுமையான எலெக்ட்ரிக் வெர்ஷன் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News