இது புதுசு

அங்க இருக்க மாதிரி கிடையாது.. இந்தியா வரும் குறைந்த விலை டெஸ்லா கார்..

Published On 2023-11-22 13:56 GMT   |   Update On 2023-11-22 13:56 GMT
  • டெஸ்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக கூறப்பட்டது.
  • இது மிட்-சைஸ் கிராஸ்ஒவர் எஸ்.யு.வி. ஆகும்.

எலான் மஸ்க்-இன் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான டெஸ்லா தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடலை ஜெர்மனி நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் இரண்டு கதவுகளை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர இந்த குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் ஜெர்மனியை தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்திய சந்தையில் டெஸ்லா களமிறங்குவது குறித்து எலான் மஸ்க் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இந்நிறுவனம் தனது மாடல்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் இறக்குமதி செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இதுபற்றிய தகவல்கள் ரகசியமாகவே உள்ளன.

கடந்த 2020 ஆண்டு டெஸ்லா அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் கார் "மாடல் Y" சற்றே குறைந்த விலை பிரிவுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிகிறது. இது மிட்-சைஸ் கிராஸ்ஒவர் எஸ்.யு.வி. ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் 3 செடான் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மை தழுவி டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

முன்னதாக வெளியான தகவல்களில் இந்திய அரசாங்கத்துடன் டெஸ்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக கூறப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து, அதன்பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

Tags:    

Similar News